Sunday, July 03, 2005

Thiruvanaikkaval

Comment posted on Shuba's page on akilandeshwari and thiruvanaikkaval [http://thinnaiarattai.blogspot.com/]

அற்புதம்! திருஆனைக்கா சிறப்பு பற்றிய கட்டுரை மிக்க நன்று. Fyi. ஸமஸ்க்ருதத்தில் அஷக்த – Weak, அஷக்த: - Unableதிருவானைக்காவல், திருவானைக்கோவில் என்று இரண்டு பெயர்களும் வழக்கில் உள்ளன.மேலும் அகிலாண்டேஸ்வரி அம்பாள், கன்னிகை. அதாவது, திருவானைக்கவலில் அம்பாள் பரமேஷ்வாரனிடத்தில் பக்தை வடிவில் இருக்கிறாள். பிரம்மோத்ஸவத்தில் திருக்கல்யாண உத்சவம் கிடையாது. தினமும் சாயரக்ஷை பூஜைக்கு பிறகு, அம்பாள் வெள்ளுடை மட்டுமே அணிகிறாள்.[அதுதான் தவத்திற்கான உடை]. மேலும் கோவிலின் கட்டமைப்பு, குறிப்பாக நீரோடை அமைப்பு [drainage system], மிகவும் நேர்த்தியானது. ஷிவ லிங்கம் 10 ஆண்டுகளுக்கு முன் வரை[திருவரங்கம், திருவானைக்கா பகுதிகளில், அடுக்கு மாடி குடியிருப்பு, மற்றும் ஆழ்துளை கிணறுகள் வரும் வரை] நிலத்தடி நீரின் நிலையில் இருந்தது. [The sanctum was so low that it was in the level of the water table.] முக்கிய நெடுஞ்சாலையிலிருந்து, கருவரை அடையும் வரை, சின்ன சின்ன படிகள் மற்றும் சறுக்குகளின் மூலம் கீழே இறங்கிக்கொண்டே செல்கிறோம். மழை காலத்தில் நீர்நிலை உயரும்பொழுது, கருவரைக்குள் நுழையும் நீரை வேளியே நந்தவனத்துக்கு பாய்ச்சி, அதிகப்படும் நீரை தெற்க்கு தெருவில் உள்ள ப்ரும்ம தீர்த்தம்கரை எனும் குளத்தில்[இப்பொழுது, அந்த குளத்தை ஆக்கிரமித்து, ஒரு எண்ணை ஆலை இயங்கிக் கொண்டிருப்பது வருத்தம்.] சேர்ப்பதற்க்கான கட்டமைப்பு மிக திட்டமிடப்பட்டு கட்ட்டப்பட்டுள்ளது. அதிலிருந்தே அதிகப்படும் நீரை காவிரியில் கலப்பதற்க்கும் கட்டமைப்பு உள்ளது. இங்கு, தேம்ஸ் நதிக்கரையில் உள்ள அமைப்புகளின் [உலகத்திலேயே அருமையான, நீரோடை அமைப்பக கருதப்படுவது] தரத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னறே கட்டப்பட்டது.ஆனால், இப்பொழுது தாங்கள் சென்று தேடினால், இதெல்லாம் அகப்படுமா என்பது சந்தேகம். அறியாமை முற்றிய நிலையில், ஆயிரமாயிரம் வருடங்களாக காக்கப்பட்டவை எல்லாம், நகர்புற வளர்ச்சியில் சிக்கு சீரழிக்கப் படுகின்றன.திருவானைக்கவலில் ஐந்தாம் சுற்று, [விபூதி ப்ரகாரம்], சிவ பெருமான், அவர்களே முன் நின்று கட்டியதாகக் கருதப்படுகிறது. இறைவனை நினைத்து, பலன் எதிர் நோக்காமல் அந்த மதிலை கட்டிய திருப்பணியாளர்களுக்கு இறைவனார் திருப்பணிக்குழுத் தலைவராக உருமாறி, திருநீற்றை மட்டுமே கூலியாகக் கொடுத்தார். அவர்கள் அதை இன் முக்த்துடன் வாங்கி, வீட்டுக்கு சென்று பார்த்தல், அவை பொற்துகள்களாக மாறி இருந்த திருவிளையாடல், இங்கு பிரசித்தம். இவ்வளவு பிரசித்தி பெற்ற ஐந்தாம் பிரகாரத்தை வலம் வர, இந்த சித்திரை மாதத்தில், இந்தியா சென்ற போது சென்றேன். Ignorance, Neglect ஆகிய தலைப்பில் கவிதை எழுத வேண்டியவர்கள, அங்கு ஒரு புகைப்படம் எடுத்து வந்தால் போதும். முழுவதும் ஆக்கிரமிப்புகள், வாக்கு வங்கிகள் அனைவரும் அந்த மதிலை ஒரு சுவராக்கி வீடு அமைத்துள்ளனர். [குடிசைகள் மட்டும் என்று எண்ண வேண்டாம். அருமையான இரண்டு அடுக்கு மாடி வீடுகளும் அதில் அடங்கும்.]கண்ணில் நீருடன் ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ என்று தேற்றிக்கொண்டு வருவதைத் தவிர வேறு ஒன்றும் அறியேன், பராபரனே.


0 Comments:

Post a Comment

<< Home