Saturday, July 09, 2005

தோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்த்தேன்

ஆஹா. வஸந்த ருது பிறந்த பொழுது, இந்த நகரம் எவ்வளவு அழகு!!

நம்ம ஊர்ல இருப்பதெல்லம் மூன்று.
1. வெயில் காலம்,
2. கடும் வெயில் காலம்,
3. காற்றழுத்த தாழ்வு மண்டல நாட்கள்.

அவ்ளோதான். அதனாலயோ என்னவோ, இந்த ஊரின், தினசரி தட்பவெட்ப மாற்றம் பார்த்து ரொம்ப ஆச்சர்யமாயிருந்தது.

நம்ம ஊர்ல எவ்ளோ நாளைக்கு நாம தினசரி வெப்ப அளவை கவனிச்சிருக்கோம். 8.30 செய்திகளில் ‘வானிலை அறிக்கை’ னு சொன்ன உடன், காத்திருந்தது போல, அப்பா கையிலிருந்து தொலைஇயக்கிய பிடுங்கிண்டு, HBO வில் ஜுலியா ராபர்ட்ஸ் படத்தின் துவக்க காட்சியை காண ஓடியிருக்கிறோம்.

குயில் பாட்டும், குருத்து ஓலையும், கொஞ்சும் மொட்டுக்களையும், அவ்ற்றை எழுப்பும் வண்டுகளும், [அட, அந்த காலத்து படத்துல, காதல் காட்சிகளில் Zoom Out பண்ணி Frame Change பண்ணி Next Shot ல BGM போட்டு காட்டுவாகளே, (நம்பள மாதிரி சிறுசுங்க(!) கெட்டு போயிட கூடதுனு), அதே தான் ] தினம் தினம் காண கிடைத்தபோது மனசு மிகவும் லேசாக, கவலை இல்லம இருந்த நிமிஷத்துல முடுவு பண்ணிணேன்.

என்ன? முடிவா? ஆமாம்.. வீட்டில் தொலைக்காட்ச்சியை, வீட்டுக்காரரிடமே [அட, வீட்டை எனக்கு வாடகைக்கு விட்டவருங்க] திருப்பி கொடுத்துடலாம்னு.

மொதல்ல தொ.கா. லைஸென்ஸ் கட்டணம் மிச்சம்.
வீட்ல கூட தங்க வரப்போற வடமொழி பசங்க கூட சண்டை மிச்சம்.
பாதி ராத்திரி F1, கிரிகெட், கால்பந்து, அனாவசிய தொடர்கள், திரைப்படங்களில் கழியும் ராக்கூத்து மிச்சம்.
நொறுக்கு தீனிகளாலும், எடுப்பு சாப்பாட்டாலும் விளையும் உடல் கேடு மிச்சம்.
”முன்ன பின்ன சமயக்கட்டுக்கு போயிருக்கியா? ” என்று வரப்போரவளிடமிருந்து வசவு மிச்சம்.

இவ்வளவுக்கு பிறகு, என் வீடும் சுற்றமும் எழில் கூடியது, வஸந்த ருது வந்ததாலா, இல்லை நான் அவற்றை கவனிக்க துவங்கியதாலா?

இந்த சுகம் நிறைந்து கனம் குறைந்த தருணத்தில் நான் எடுத்த அடுத்த முடிவுகள்.
1. பள்ளி காலத்திற்க்கு பின் என்னுள் தூங்கபோன நீண்ட தூர ஓட்ட வீரன், மற்றும் கால்பந்து வீரனை தட்டி எழுபுவது
2. வீட்டில் முன்னும் பின்ன்ம் மண்டி கிடக்கும் புதற்களை களைந்து, தோட்டம் அமைப்பது.

மிகவும் நல்ல முடிவு என்கிறீர்களா?
அப்பொறம்?? அவ்ளோதானா??
ம்ம்ம..

தோட்டம் வள்ர்த்தேன் தோட்டம் வளர்த்தேன் னு நம்ப மன்மதன் [10£ டிக்கெட் கொடுத்து Southhall சென்று பார்த்த படம் ]சிம்பு மாதிரி தலைப்ப வெச்சுட்டு அவ்ளோதானானு கேக்றீங்களா?

இல்லை இருக்கு, அது ஓரு பெரிய்ய்ய்ய்ய கதை. அதை அடுத்த பதிவுல பதிக்கறேன்.
ஓகேவா...


9 Comments:

At Sat Jul 09, 07:55:00 AM CDT, Blogger Unknown said...

aaaha thottam poda poreengala? Before and after padam pudichu podunga!

10 Pound kuduthu Southall poi Manmadhan paakuradhu konjam too muchnnu dhaan thonudhu :)

 
At Sat Jul 09, 08:08:00 AM CDT, Anonymous Anonymous said...

அன்புள்ள டிஜே அவர்களுக்கு,

தோட்டத்துல கொஞ்சம் நஞ்சமிருக்கிற புல்லையாவது மிச்சம் வைங்க! நம்ம மன்மதன் சிம்பு தலை மாதிரி ஆயிடப்போவுது.

'ஏய் தோட்டக்காரா!'ன்னு மீசை இல்லாத ரஜினி, தேங்காயை சொடுக்கி போட்டு கூப்பிடுவாரே அந்த படம்தான் அநியாயத்துக்கு ஞாபகம் வருது? (என்ன படம் தெரியுமா?!)

வஸந்தருது வந்தாலே வூட்டுக்காரி நெனப்பு வரும்பாக. அத்தையும் ஊடால வுட்டு தாக்கிப்புட்டீக!

மொத்தத்துல கலக்கிபுட்டீக!

என்றும் அன்புடன்,
ரங்கநாதன்

 
At Sat Jul 09, 10:19:00 AM CDT, Blogger ioiio said...

No tanglish?

But Manmadhan'ku ellam 10 pounds waste pannaaadheenga.. yana gupta chumma dance dhaan nothing else :)

sutha waste paaa

 
At Sat Jul 09, 10:49:00 AM CDT, Blogger Adaengappa !! said...

Interesting..Waiting for Part II

 
At Sat Jul 09, 03:59:00 PM CDT, Blogger Chakra said...

Only few days back I was thinking about a suitable Tamil word for Remote. "Tholai Iyakki" sounds to be a good one.

btw, Manmadhan £10 ellam romba over boss..

 
At Sat Jul 09, 04:34:00 PM CDT, Blogger Kasthuri said...

I am having some difficulty with the font. Should I download anything to view it more clearly ?

 
At Sun Jul 10, 08:29:00 AM CDT, Blogger TJ said...

andh 10£ manmadhan too much nu dhaan naanum nenachein, 15£ anniyan pakakradhuku munnadi.

ranganathan avarghale, neenga aedho thillu mullu pathi pesara madhiri irukku. enakku adhellam onnum theriyadhu.

TholaiIyakki ya vida tholaiviyakki is more easy to pronouce illa. pera maathi vechulakam. :)

Kasthuri, no font is needed to read this. Anyway i will send u the IME installable, using which i type in winword, with the .chm. Guess that shud help

 
At Sun Jul 10, 08:51:00 AM CDT, Blogger TJ said...

@Kasthuri.

I have put the TamilIME file at this location

http://s45.yousendit.com/d.aspx?id=3G5CVWV33SLU52GUAWU9QAL6IS

 
At Sun Jul 10, 10:31:00 PM CDT, Anonymous Anonymous said...

Thank you so much !

 

Post a Comment

<< Home