Sunday, July 10, 2005

தோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்த்தேன் – பாகம் – 2

முடிவுகளா எடுத்து, ஒரு முடுவோட கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா னு கிளம்பின எனது கால்பந்து பராக்கிரமத்தை கேட்பதற்க்கு முன் தோட்டம் விஷயத்தை சொல்லி விடுகிறேன்.

முதல்ல எனக்கும் தோட்டக்கலைக்கும் எவ்ளோ சம்பந்தம்?

திருச்சிரப்பள்ளி மாநகரிலே, சிறிய தோட்டம் இருக்கும் வீட்டில் தான் குடி இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், உச்சி மலைகோட்டை மீதேறி, வடக்கு முகமாக நின்று கீழே பார்த்தால், தென்னை மரங்கள் தெரியும் ஒரே வீடு.

அப்பப்பொழுது தோட்டத்தில் இருக்கும் புஷ்ப செடிகளை பார்த்தது அனுபவபட்டவன், ஆம் பார்த்து மட்டும் தான். !!


சரி, இப்பொழுது களப்பணிக்கு தயாராவோம். மாடிப்படிக்கு கீழே யாரும் திறக்காமல் இருக்கும் அந்த மஹாமஹ கதவை [எங்க திருவரங்க ஸ்வர்கவாசலை கூட ஆண்டுக்கு ஒரு முறை திறக்கிறார்கள்.] திறந்தால, பண்டை கால ஆங்கில நாகரீக அகழ்வாராச்சி போல் ஒரு உண்ர்ச்சி [ஃபீலிங்கு].

ராபின் ஹூட் காலத்தை முந்திய, துரு ஏறிய பெரிய கத்திரிக்கோல். [விளம்பரத்துல ஒரு பையனுக்கு முடி வெட்டுவதற்க்கு கொண்டு வருவாங்களே அது] அப்புறம் ஒரு கதிர் அரிவாள், ஆங்கிலேய களக்கொத்தி. இவை தான் அந்தக் கிடங்கின் பொக்கிஷங்கள்.

[குறிப்பு:- இந்திய மண்வெட்டியோ களக்கொத்தியோ, காலை அகட்டிக்கொண்டு, வெட்டும் மணலை கால்களுக்கு இடையே குவித்து, எனது விஷயங்களை என்னுள் வைத்துக்கொள்கிறேன் என்ற தத்துவத்தை(!) அடிப்படையாகக் கொண்டது. ஆனால் மேற்கத்தியவைகளோ, மணலை வெட்டி, எதிராளியின் மேல் போட்டு, பொறுப்பை கழிக்கும் தத்துவம்.(! ஆஹா.. என்ன ஒரு புல்லரிப்பு... தத்துவம் நெ.1539) ]

இவற்றுடன் என் ஒரு கை ஒரு கால்!! இதுதான் எனது வளங்கள். [Resources னு சொல்லுவாங்களே..][அந்த ஒருகை ஒரு கால் விஷயம், கால்பந்து பிரதபத்தில்..]

சரி, ஒரு நல்ல முஹூர்த்த நாளாக பார்த்து.[லண்டன் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தன்று, அவரை வணங்கிவிட்டு], அறுவடை துவங்கிற்று. குனிந்து, நிமிர்ந்து வெட்டி அறுத்து ஒரு வழியாக புதர்களை களைந்தாயிற்று.

சில நிமிடங்களில், “அடேய், உனக்கு இது தேவையா” என்று ஒரு குரல்!, யார்னு கேட்டால், நம்ம இடுப்பு சார் தான்.[அவர் என்ன சிம்ரன் இடுப்பா? பார்த்தவுடன் அடையாளம் தெரிய?? ]

“என்ன் ஐயா,வாங்க. நல்லா இருகீங்களா? என்ன விஷயம்... “
”ஆமாம், நா நல்ல இருக்கர்து பத்தி தான் விஷயம்.” என்று சீறினார்.
”இன்னும் இரண்டு நிமஷத்தில, களத்தில் இருக்கும் துருப்புக்களை வெளியேற்று, இல்லை வெடிகுண்டு தாக்குதல் துவங்கும்”
ஆஹா, அமெரிக்கா மாதிரி, ஆழம் தெரியாம கால வுட்டுட்டோமா??

”சரிங்கண்ணா, நீங்க் சொன்னா பேச்சே கிடையாதுங்கண்ணா” என்றதும், வரம் கொடுத்த சாமி மாதிரி மறைந்து போயிட்டார்.


நாங்க தான் ஐடியா மணியாச்சே. பின் பக்கத்து புதர்களை “கட்டுப்படுத்தப்பட்ட தணல் முறை” [Controlled Nuclear Reaction அப்படிங்கற மாதிரி !] எனும் நவீன முறையை கண்டுபிடித்து கையாண்டு அகற்றி விட்டோம். [அது இன்னானு உங்களுக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும!]

சரி, அடுத்து பயிரிடும் படலம்.. களப்பணில களைப்பயிருச்சு. அத்த அடுத்த தபா வெச்சுகலம், இன்னாங்கறீங்க...


5 Comments:

At Mon Jul 11, 06:56:00 AM CDT, Blogger Chakra Sampath said...

Interesting.. :)

 
At Mon Jul 11, 06:57:00 AM CDT, Blogger Chakra Sampath said...

btw, when you typed your blog URL in my site, you have misspelt blogspot as blogPSot, which goes to a porn site..

 
At Mon Jul 11, 09:14:00 AM CDT, Blogger TJ said...

Goodness!!
The typo, my faux pas.
hmm.. look. What can a typo do, sorry, if had popped up in ur workplace or somewhere where it mite have made u embarassed.

 
At Mon Jul 11, 05:58:00 PM CDT, Anonymous ranganathan said...

அன்புள்ள டிஜே அவர்களுக்கு,

தோட்டத்தைப் பத்தி பேசாம ஊர்க்கதை அடிக்கிறீங்களே.......என்னத்த சொல்ல?

முருகனை ஞாபகப்படுத்தினா சரி, அதென்ன சிம்ரனை வேற கூட்டு சேத்துக்கிறீங்க?

தப்பும்மா......ரொம்ப தப்பு!

சக்ரா ஸாரை வேற வம்புக்கிழுத்து......ஜமாய்(டா) ராஜா!

என்றும் அன்புடன்,
ரங்கநாதன்

 
At Sun Jul 17, 03:20:00 AM CDT, Blogger WA said...

London Sri Murugan Kovil Kumbhabishegathirukku poneengala! Neraya kootamaa? Photos edutheengala? Do write about it sometime.

 

Post a Comment

<< Home