Monday, July 18, 2005

தோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்த்தேன் – பாகம் – 3

ஒரு வழியாக தோட்டத்தில் முட்புதர்களை களைந்தாயிற்று. பாதியை வெட்டியும, மீதியை எரித்தும், பார்ப்பதர்க்கு குத்து மதிப்ப்பக, நம்ப ஊரில் கட்டாந்தரை கிரிக்கெட் மைதானம் போல் ஆகி விட்டது.

இதிலேயே பாதி நேரம் போய் விட்டதால், அணுகுமுறை மாற்ற வேண்டிய கட்டாயம். [அதாம்பா ஸ்ட்ராடஜி!]

“ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய்” அப்படீனு பெரிசுங்க சொன்னதுக்கு ஏற்ப்ப, வாசல் கொல்லை என்ற இருதாரங்களில், பின்னவளை பின்னுக்கு தள்ளியாயிற்று.

சரி, அடுத்த கேள்வி, என்ன பயிர் செய்யலாம்??

ஒரு முறை, எங்கள் கல்லூரி, பேராசிரியர், “இப்பொழுது, உங்களிடம், எதை பற்றி பேசுவது? இதை பற்றியா, அதை பற்றியா” என்று அடுக்கி கொண்டே அறை மணி நேரம் கழித்தார். அது போல் அல்லாமல் சட்டென்று, ரோஜா வளர்ப்பதாக, அதுவும் பக்கத்து வீட்டுப் பெண் தினசரி காலையில் நீரூற்றி வளர்த்தாலே, மஞ்சள் ரோஜா, அதே போல, என்று முடிவாயிற்று!!

உடனே அருகே உள்ள ஒரு பவுண்டு கடையில, விதை/கன்று வாங்கச் சேன்றேன். இந்த 1£ கடைகள், நம்ப ஊரு “எதை எடுத்தலும் பத்து ரூவாய், வாங்கண்ணே, வாங்கக்கா, தரமான பொருளுங்கக்கா, கம்பேனி விளம்பரத்துக்காக சிறப்பு விற்பனைண்ணா” போன்றவை. எங்க பாட்டி சொல்வது போல “கழுதை விட்டை கை நிறைய” என்று கிடைக்கும்.

கையளவு விதை, இரண்டு கன்று வாங்கி, தலையில் முண்டாசு கட்டி, “கடவுளெனும் முதலாளி கண்டேடுத்த தொழிலாளி” னு புரட்சி தலைவர் மாதிரி, நெனப்பு. பாத்தி வெட்டி, பயிர் செஞ்சு, உரம் போட்டு, நீர் ஊற்றியாய்ற்று.

அன்றிலிருந்து, தின்மும் காலை கால் ம்ணி, மாலை ஒரு மணி, நீர் ஊற்றி, செடியுடன் பேசி. அது பூத்து குலுங்கி, அந்த மலர்களை செண்டாக்க்கி பக்கத்து ஸீட் ஜென்னிக்கு கொடுத்து, கட் பண்ணி, ஸுவிட்ஸர்லாந்தில் பனிச்சறுக்கில் டூயட். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ எவ்ளோ ஸூப்ப்ர்ர்ர்....

இரண்டு வாரம் கழித்து, விதையில் இருந்து ஏதும் மாற்றம் இல்லை, ஆனால, கன்று, சற்று காயத்துவங்கியது. ஆஹா, பழைய பட்டை உரிந்து, புத்துயிர் கிடைக்கப்போகிறது.
பட்டை உரிந்து, பட்டுப் போகிறது என்பது, எனக்கு அடுத்த வாரம் தான் விளங்கிற்று.

க.வி.கை.நி.[1] கடையில் சென்று முறையிட்டதற்க்கு, மிகவும் வருந்தி, ஒரு பூத்தொட்டியை இலவசமாக எனக்கு அளித்து, வாயை அடைத்து விட்டன்ர்.
சரி அந்த தொட்டிய வைத்து என்ன செய்தேன்.?? அடுத்த, இறுதி பாகத்தில் அறுக்கிறேன்.


5 Comments:

At Mon Jul 18, 02:31:00 PM CDT, Anonymous lxsn said...

intha pudhu poonthootiyavadhu poothukulungi ramyamanathoru soozhalai um veetil
undakkum enru nambukirein ;)

 
At Mon Jul 18, 05:00:00 PM CDT, Blogger WA said...

Kanavu ellam sooooperaa pogudhu, pakkathu seattu jennyoda reaction pathi kattayamaa oru padhivu podunga.

 
At Mon Jul 18, 06:02:00 PM CDT, Blogger ranganathan said...

thiruchiyum londonum......combination superu......

jamayingo:-)

 
At Tue Jul 19, 12:12:00 AM CDT, Anonymous Anonymous said...

thottam valarpathu nalla vishayam thaan. adhai kooda ippadi ezhudum rasanai iruppadu miga nalla vishayam. enakku idhil anubhavam illaadadal comment adikka maatten.

anyway neenga vibhutiyogam pattri ezhudungal
waiting for it, yes siree!

 
At Tue Jul 19, 04:14:00 PM CDT, Blogger TJ said...

:) vaazthukaluku nandri..

 

Post a Comment

<< Home